முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரேசன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி... மண்ணெண்ணெய் வழங்கும் அளவை குறைத்த மத்திய அரசு?

ரேசன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி... மண்ணெண்ணெய் வழங்கும் அளவை குறைத்த மத்திய அரசு?

மாதிரி படம்

மாதிரி படம்

ration card kerosene quota | ரேசன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் அளவு குறித்து விளம்பரப்படுத்தும்படி திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து வழங்குவதால், ரேஷன் அட்டைதார்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறித்து விளம்பரப்படுத்தும்படி திருவாரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்காரணமாக, கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டின் மொத்த தேவையில் 7 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேசன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் அளவு குறித்து விளம்பரப்படுத்தும்படி திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தப்பி தவறி கூட கோடையில் இந்த 6 இடங்களுக்கு மட்டும் சம்மர் வெக்கேஷன் பிளான் பண்ணிடாதீங்க…

இதுதொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து ரேஷன் அட்டைதாரர்களிடம் புகார்கள் வருவதைத் தவிர்ப்பதற்காக, மாவட்ட வாரியாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்ணெண்ணெய் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அளவு குறித்து அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Central government, Tamilnadu government