முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை... போலீசில் புகார்..!

ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை... போலீசில் புகார்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைர மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு நடிகர் தனுஷுடனான திருமண முறிவுக்குப் பிறகு மகன்கள் யாத்ரா, லிங்காவுடன்  தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் காணமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

top videos

    வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Aishwarya Rajinikanth, Gold Theft