சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், நேற்றிரவு திடீரென மழை பெய்தது. கோயம்பேடு, திருமங்கலம், சென்ட்ரல், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. உத்தனப் பள்ளி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன், அவற்றை பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர். சூளகிரி, பேரிகை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்த நிலையில், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. பெரியகுளம், முருகமலை, வடுகபட்டி, லட்சுமிபுரம், சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
இதையும் படிக்க : வறுமையை வென்ற கனவு...! சாதித்து காட்டிய இளம் ஐபிஎஸ் அதிகாரி சபின் ஹசன்.. தன்னம்பிக்கை பதிவு..!
சேலத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் திடீரென மழை பெய்தது. தூத்துக்குடியில் இன்று அதிகாலையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
இதே போல கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இடையர்பாளையம், மணியக்காரன் பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது.
இதனிடையே, கொடைக்கானல் மலைப்பகுதிகளான அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, கீழ்பூமி, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி உள்ளிட்ட இடங்களில் சாரல் விழுந்தது. இதே போல, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், திற்பரப்பு, அருமனை, மார்த்தாண்டம் , குழித்துறை உட்பட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rain Update, Rainfall, Weather News in Tamil