முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெயில் அதிகமா இருக்கா..? வருகிறது மழை... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வெயில் அதிகமா இருக்கா..? வருகிறது மழை... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

மழை

மழை

தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பகல் 11 மணி முதல் 3 வரை தேவையின்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க : தீ விபத்தில் பலியான தமிழர்கள்... ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இதன் காரணமாக, 20 ஆம் தேதி முதல் 2 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கணித்துள்ளது. வட மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

top videos

    இதனால், வெளியே செல்வதை தவிர்ப்பது, நீர் சத்து மிக்க உணவுகளை உண்பது என்பன உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

    First published:

    Tags: MET, Rain Forecast, Rain Update, Weather News in Tamil