முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எச்சரிக்கை! இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

எச்சரிக்கை! இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மழை

மழை

அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காலை வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களுக்கும் மழை தொடரும் என்று அறிவித்துள்ளனர். நேற்று முதல் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Rain Update, Weather News in Tamil