முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடைய மறந்துடாதீங்க... அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது... வானிலை அலெர்ட்..!

குடைய மறந்துடாதீங்க... அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது... வானிலை அலெர்ட்..!

மழை

மழை

Chennai rain | வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால் தமிழகத்தில் மழை தொடர்ந்து வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணிநேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோல, விழுப்புரத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கானை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. இதையடுத்து, ஐஸ் கட்டிகளை சேகரித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் அரை மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், நகர்ப்பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ததால், குளுமையான சூழல் நிலவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

top videos

    இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

    First published:

    Tags: Heavy rain, MET warning