முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிடிஆர் ஆடியோ விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்

பிடிஆர் ஆடியோ விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

‘உங்களில் ஒருவன் பதில்கள் ’ பதிவில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோ இரு வாரங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வெளியானது. எனினும், அது போலியானது என நிதி அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், மற்றொரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதுகுறித்து டிவிட்டரில் விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன், ஆடியோவில் உள்ளது போன்று தாம் யாரிடமும் பேசவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள் ’ பதிவில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார்.

கேள்வி : நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி..?

பதில்: இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு நேரம் சரியா இருக்கு. மேலும் இதுபற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Annamalai, Minister Palanivel Thiagarajan, MK Stalin, Phone audio, Tamil News