தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று பதிலுரை வழங்கினார். போக்குவரத்துத் துறை தனியார் மயம் ஆக்கப்படுகிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார். அவர், தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து இயக்கத்தில் தனியார் ஈடுபாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான வழித்தடத்தில் பேருந்துகளும், ஓட்டுநரும் தனியார் நியமிப்பவர்களாக இருப்பார்கள். மேலும் வழித்தடமும், நடத்துநரும் அரசுக்கு சொந்தமானவர்களாக இருப்பார்கள். எனவே, அரசு நிர்ணயிக்கின்ற கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்கு உலக வங்கி வகுத்துக் கொடுத்த பரிந்துரை அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதற்கு அரசு முதலீடு செய்யாமல் தனியார் மூலம் பேருந்து இயக்கம் அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Also Read : 10ம் வகுப்பை பாதியிலேயே கைவிட்டது இவ்வளவு மாணவர்களா?... வெளியான அதிர்ச்சி தகவல்...!
அரசு முதலீடு செய்யாமல் அரசினுடைய வழித்தடத்தில் தனியாருடைய பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கலாம் என்பது தான் இத்திட்டத்தின் மூலக்கூறு. அது குறித்த ஆய்வறிக்கைக்குத் தான் இப்பொழுது கன்சல்டன்ட் நியமிப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது என்றார்.
தொடர்ந்து, “இது தனியார் மயம் அல்ல. இந்த நடைமுறை ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இருக்கிறது. Gcc method என்ற அடிப்படையில் அரசினுடைய வழித்தடம் அரசுக்குச் சொந்தமாக இருக்கும். அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க முன்வருகின்ற தனியார் நிறுவனங்கள் பேருந்துகளை இயக்கலாம்” என்று கூறினார் அமைச்சர் சிவசங்கர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Public Transport, Transport ministry