முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உங்கள் அன்புக்கு நான் நன்றியுள்ளவன்... சென்னை பயணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

உங்கள் அன்புக்கு நான் நன்றியுள்ளவன்... சென்னை பயணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

மோடி

மோடி

சென்னை மக்கள் என் மீது கொண்டுள்ள அன்புக்கு நான் நன்றியுள்ளவன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்னை வந்தார். மதியம் 2.45 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து தனி விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்து அடைந்தார். அதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இந்த திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, சென்னை ஐஎன்எஸ் அடையாருக்கு ஹெலிகாப்டர் மூலம் இறங்கி, சாலை மார்க்கமாகச் சென்னை எம்.ஜி.ஆர் சென்டரல் ரயில் நிலையத்திற்கு வந்தார்.

காரில் வரும் மோடி

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தமிழ்நாட்டில் செல்லும் முதல் வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தைச் சென்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, பல்லாவரம் அல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி கலந்துகொண்டார். விழாவில் பாஜகவினரும், திமுகவினரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

top videos

    இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பாரத் மாதா கி ஜே எனவும் மோடி வாழ்க எனவும் கோஷம் எழுப்பினர். மற்றொரு பக்கம் திமுகவினர் பெரியார் வாழ்க அண்ணா வாழ்க என்றும் கோஷம் எழுப்பினர். சென்னை பயணம் குறித்த பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், ‘சென்னை மக்களின் என் மீது கொண்டுள்ள அன்புக்கு நான் நன்றியுள்ளவன். எப்போதெல்லாம் நான் இந்த சிறந்த நகரத்திற்கு வருகிறோனோ அப்போது நான் உற்சாகமடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Modi