பிரதமர் இன்று தெப்பக்காடு வந்த போது ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி ஆகியோரிடம் கலந்துரையாடினார்.
சென்னை பயணத்தை முடித்துவிட்டு மைசூருவுக்கு சென்ற பிரதமர் மோடி, பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை காலை பார்வையிட்டார். அங்கிருந்து முதுமலை புலிகள் காப்பத்துக்கு வந்த பிரதமர், தெப்பக்காட்டில் உள்ள முகாமில், வளர்ப்பு யானைகளை நேரில் பார்வையிட்டதுடன் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளை வழங்கினார்.
மூத்த யானை பாகன்கள் திருமாறன், தியாகராஜ், குள்ளன், மாறன் ஆகியோருடன் கலந்துரையாடிய பிரதமர், கள இயக்குநர்கள் மற்றும் டி23 புலியை பிடித்த குழுவினருடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆஸ்கர் விருது வென்ற the elephant whisperers படத்தில் இடம்பிடித்திருந்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த மகிழ்ச்சி நிறைந்த தருணம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு பெள்ளி பேட்டியளித்தார். அவர் கூறுகையில், பிரதமர் யானையிடம் வந்து கரும்பு கொடுத்தார். யானையை நல்லா வளர்த்து இருக்கீங்க என பாராட்டுனார். பின்னர் பிரதமர் ரெடியாகி வந்தவுடன் திரும்ப கூப்பிட்டனர். என்ன உதவி வேண்டும் என கேட்டார்கள். அவரிடம் நிறைய கோரிக்கைகள் இருக்கு என சொன்னோம். குறிப்பாக சாலை வசதி இல்லை, சரியான வீடு இல்லை, மின்வசதி இல்லை என்று சொன்னோம். நேரில் சென்று மனு கொடுக்க சொல்லி இருக்கின்றார். நான் சொல்லிடுறேன் என சொல்லி இருக்கின்றார்.
நாங்கள் யானையுடன் இருக்கும் படம் அவருக்கு கொடுத்தோம். டெல்லிக்கு வரனும் என சொன்னார். யானைக்காரங்களுக்கு நிலுவையில் இருந்த பணத்தை கொடுத்து விட்டனர். இன்னிக்கு பிரதமரை பக்கத்தில் நின்று பார்த்தது நன்றாக இருந்தது" என்று பெள்ளி தெரிவித்தார்.
தனக்கென்று எதுவும் கேட்காமல், கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரிய பெள்ளியின் கோரிக்கையை கண்டு பிரதமர் மோடி வியந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi, PM Narendra Modi