புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்காததை விமர்சித்து முரசொலியில் தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், புதிதாக பிறந்துள்ள ஜனநாயகம், தன் வடிவத்தை தக்க வைத்துக் கொள்ளும் அதேவேளையில், சர்வாதிகாரத்திற்கு வழிவிடுவது முற்றிலும் சாத்தியமானதுதான் என்றும், ஒரு நிலச்சரிவு ஏற்படுமானால் இரண்டாவது சாத்தியப்பாடு உண்மையாகிவிடும் என்றும் இந்திய அரசியலமைப்பு அவையில் அம்பேத்கர் பேசியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தகைய நிலச்சரிவு நிலையைத்தான் பாஜக ஆட்சி, நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதாகவும் சாடியுள்ளது. பாஜக-வின் ஒற்றைத் தன்மை என்பது மோடியின் அரங்கேற்றமாக மாறும் காட்சியாகவே நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா அமைந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளது.
ஒரு குடியரசு நாட்டின் நாடாளுமன்றத்தை திறந்து வைக்கும் அல்லது அந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை அந்த நாட்டின் குடியரசு தலைவர் இழந்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதேபோல, குடியரசுத் தலைவர் பதவி தகுதியற்றதாக ஆகிவிட்டதா என்றும், பழங்குடி சமூகத்தில் பிறந்தவர் என்பதால் அவமானம் செய்கிறார்களா அல்லது பெண் என்பதால் அவமானப்படுத்தப்படுகிறாரா என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... School Reopen | பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறது... சூசக தகவல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஸ்..
நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த இந்திய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் குடியாட்சித் தன்மையை காப்பாற்றும் முடிவு என்றும் கூறியுள்ளது.
நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர்களை அழைக்காதது பாஜகவின் அரசியல் சர்வாதிகாரத்தை மட்டுமல்ல, சனாதன சர்வாதிகாரத்தையும் காட்டுவதாகவும், இது அம்பேத்கரே எதிர்பாராத சர்வாதிகாரம் என்றும் முரசொலி தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Murasoli, Parliament