முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது.. திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது..” - கவிஞர் வைரமுத்து

“கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது.. திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது..” - கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து - அண்ணாமலை

கவிஞர் வைரமுத்து - அண்ணாமலை

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது சர்ச்சையாகி வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில பாஜக இணை பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட பலர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து கன்னட வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்த விவகாரத்திற்கு திமுக எம்.பி கனிமொழி ‘தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்’ என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது.

ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது மறக்க வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.

top videos

    தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது சர்ச்சையாகி வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

    First published:

    Tags: Annamalai, BJP, Poet vairamuththu, Tamil Culture