முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

புதிய பாராளுமன்றம் - அன்புமணி ராமதாஸ்

புதிய பாராளுமன்றம் - அன்புமணி ராமதாஸ்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.

  • Last Updated :
  • Delhi, India

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடியால் வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட உள்ளது. இவ்விழாவினை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த விழாவில் பாமக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், ‘தில்லியில் வரும் 28-ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்’ என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக, தமிழ்மாநில காங்கிரஸ், உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கும் என அறிவித்த நிலையில், பாமகவும் விழாவில் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க கோரி தொடர்ந்த வழக்கு... தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜு ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட 7 கட்சிகளும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் 18 கட்சிகளும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Central Vista, Pmk anbumani ramadoss