முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒரு மாதத்திற்குள் கடைகளுக்கு தமிழில் பெயரை வைக்க வேண்டும் - துண்டறிக்கை வழங்கி வலியுறுத்திய ராமதாஸ்

ஒரு மாதத்திற்குள் கடைகளுக்கு தமிழில் பெயரை வைக்க வேண்டும் - துண்டறிக்கை வழங்கி வலியுறுத்திய ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னையில் உள்ள கடைகளில் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயரை வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் உள்ள கடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அதனைத் தவறினால் கருப்பு மை கொண்டு கடை பெயர்ப் பலகை அழிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் தமிழைத் தேடி இயக்கம் சார்பில், பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைக்கக் கோரி, சென்னை தியாகராய நகர், பாண்டி பஜாரில் உள்ள கடைகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் துண்டறிக்கைகளை வழங்கினார். கடை உரிமையாளர்களிடம் துண்டறிக்கை வழங்கியதுடன், பிறரிடம் பேசும்போது தமிழில் பேச வேண்டும் என்றும் ராமதாஸ் அறிவுறுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "தமிழைத் தமிழ்நாட்டிலேயே தொலைத்து விட்டு தமிழ் எது? பிறமொழி எது எனத் தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கவலை தெரிவித்தார்.

Also Read : நாளை சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை... உள்ளிருப்பு போராட்டம்- ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திட்டம்

தமிழ் தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் மொழியே இருக்காது என்றும் அச்சம் தெரிவித்தார். எனவே, வணிகர்கள் பிற மொழி சொற்கள் இல்லாமல் பெயர்ப் பலகைகளை அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

top videos
    First published:

    Tags: Chennai, PMK, Ramadoss