விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இவர்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறுதல் கூறினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் இறந்துள்ளனர். 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது அரசின் தோல்வியாக பார்க்கிறேன். கள்ளச் சாராயத்தை ஒழிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச் சாராயத்தை காவல்துறை, வருவாய்த்துறை, அரசியல் கட்சி ஆதரவு இல்லாமல் விற்க முடியது. இந்த சம்பவம் திடீர் என நடக்கவில்லை. பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. பாதிக்கபப்ட்டவர்களுக்கு இன்னும் உயரிய சிகிச்சை கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். இந்த சம்பவத்திற்கு முழு காரணம தமிழக அரசுதான்.
கள்ளச்சாராயம் பாதிப்புகளை தடுக்கவே அரசு டாஸ்மாக் நிறுவனத்தை உருவாக்கியது என்கிறார்கள். ஒரு பக்கம் கள்ளச்சாராயம், மற்றொரு பக்கம் அரசு சாராயம். இரண்டுமே சாராயம் தான். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டாஸ்மாக் சாராயத்தினால் 5 லட்சம் பேர் இறந்துள்ளனர். எங்கள் கோரிக்கை தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இன்றைக்கு இளைஞர்கள், கூலித் தொழிலாளர்கள் மது இல்லாமல் இருக்க முடியாது என்றை நிலையை இரண்டு கட்சிகளும் உருவாக்கியுள்ளன.
கடந்த ஒர் ஆண்டில் மது விற்பனை 36,000 கோடி. இந்த ஆண்டு 45,000 கோடி என அமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளார். இதற்கு டாஸ்மாக்கில் மது விலை உயர்ந்தப்பட்டுள்ளது என விளக்கமளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மதுவிலக்கு துறை அமைச்சர் இருக்கிறார். ஆனால் இன்றைக்கு மதுவை திணிக்கின்ற வேலை தான் தமிழக அரசு செய்து வருகிறது. இன்றைக்கு இயந்திரம் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. பல வகைகளில் தமிழக அரசு மதுவை திணித்து வருகிறது.
தற்போது தமிழக முதல்வர் இரண்டு மாவட்ட எஸ்.பி-களை பணியிடை நீக்கம் செய்துள்ளார். ஆனால், அது போதாது முதலில் மதுவிலக்கு துறை அமைச்சரை மாற்ற வேண்டும். இது போன்ற சமூக அக்கறையில்லாத அமைச்சர்கள் மாற்ற வேண்டும். மதுவிலக்குத் துறையை என் கண்காணிப்பில் விடுங்கள். சாராயத்தை ஒழித்து காட்டுகிறேன். இந்த தலைமுறை மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் கொண்டுவந்துள்ளது. இது வெட்ககேடு. முதல்வர் செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்களை மாற்றி சமூக அக்கறையுள்ள அமைச்சரை நியமிக்க வேண்டும்.
இதையும் படிக்க : முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பேட்டி..!
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பலமுறை ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது எந்த நடவடிக்கையும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி 500 கடைகளை மூடபோவதாக கூறியுள்ளார் வருவானம் குறைவாக உள்ள கடைகளை மட்டும் மூடுவார்கள். கடந்த இரண்டு நாட்களில் சாராயம் விற்ற 50பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது கொள்ளை முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் : ஆ.குணாநிதி (விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss