முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எனக்கும் தோனியை பிடிக்கும், ஆனால்.... அன்புமணி ராமதாஸ் வேதனை

எனக்கும் தோனியை பிடிக்கும், ஆனால்.... அன்புமணி ராமதாஸ் வேதனை

அன்புமணி ராமதாஸ்- எம்எஸ் தோனி

அன்புமணி ராமதாஸ்- எம்எஸ் தோனி

திராவிட மாடல் என பேசிக்கொண்டு வருகிறார்கள். திராவிட மாடல் என்பது முதலாளித்துவம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

எனக்கு தோனி மிகவும் பிடிக்கும். ஆனால் சிஎஸ்கேவில் ஒரு தமிழன் கூட இல்லை என்பது வருத்தமாக உள்ளது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி 2.0 விளக்க பொதுக்கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்டு பேசிய அன்புமணி, ’தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கு வேலை என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். எனக்கு தோனி மிகவும் பிடிக்கும். ஆனால் CSK வில் ஒரு தமிழன் கூட இல்லை என்பது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.

12 மணி நேர வேலை தொழிலாளர் சட்ட முன்வடிவு குறித்து பேசிய அவர், திராவிட மாடல் என்பது முதலாளித்துவ அமைப்பு சுரண்டலுக்கு ஆதரவானது என்று தெரிவித்தார். மேலும், கடந்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்களான) சட்ட மசோதா குறித்து பேசிய அவர், முதலாளித்துவதற்காக ஒரு சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. 100 ஏக்கருக்கு மேல் தொழிற்சாலை வைத்திருப்பவர்களுக்கு, சிறப்பு அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது. சாதாரண மக்கள் நீர் நிலையில் ஒரு வீடு கட்ட கூடாது. ஆனால் தொழிற்சாலை அந்த இடத்தில் கட்டலாம். இந்த சட்டம் மக்களுக்கு தெரிவதில்லை என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கநெஞ்சம் பதைபதைக்கிறது... டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு

தமிழ்நாட்டில், திராவிட கட்சிகள் நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறார்கள். திராவிட மாடல் என பேசிக்கொண்டு வருகிறார்கள்.  திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், ஆனால்,  விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் தேவை பாட்டாளி மாடல் தான். திராவிட மாடல் VS பாட்டாளி மாடல் என்ற விவாதத்திற்கு நான் தயார் என்றும் தெரிவித்தார்.

top videos

    காச போட்டால் பாட்டில் வரும். இதுதான் திராவிட மாடல். இதுதான் வளர்ச்சி, தமிழ்நாட்டில் இரண்டு துறை வளர்ந்துள்ளது. ஒன்று சினிமாத்துறை மற்றொன்று சாராயத்துறை என்றும் காட்டமாக பேசினார்.

    First published:

    Tags: CSK, IPL 2023, Pmk anbumani ramadoss