முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஏப்.8-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி - சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கிறார்!

ஏப்.8-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி - சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கிறார்!

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதி தமிழ்நாடு வர இருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயிலின் அடுத்தக்கட்ட சேவை சென்னை - கோவை இடையே தொடங்கப்படவுள்ளது. இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு உள்ளார்.

இந்தியாவின் அதிவேக ரயில் எனப் புகழப்படும் வந்தே பாரத் ரயில் சேவைக்கு, தொடங்கப்பட்ட அத்தனை இடங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அண்மையில் சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவையைப் பயணிகள் பாராட்டி வருகின்றனர்.

இந்த பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில், சென்னை சென்ட்ரல்- கோவை வரை வந்தே பாரத் ரயில் சேவை வழங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் சேவையை ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், தாம்பரம் - செங்கோட்டை ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Also Read : வரும் நிதியாண்டில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு

இதே போன்று, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்க இம்மாதம் 27 ஆம் தேதி பிரதமர் வர இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், ஏப்ரல் மாதம் வருவதாக உறுதியாகியுள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai, Coimbatore, PM Modi, Train, Vande Bharat