முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்... வெளியானது புது அப்டேட்..!

அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்... வெளியானது புது அப்டேட்..!

காலை உணவுத் திட்டம்

காலை உணவுத் திட்டம்

School Breakfast scheme | வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் தற்போது 1,545 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. இதன்மூலம், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்தத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்ததால், இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் மூலமாக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்புக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க... மாணவர்கள் கவனத்திற்கு... 10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்...!

எனவே, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தம் வழங்குவதற்காக ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ஜூலை மாதத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

top videos
    First published:

    Tags: CM MK Stalin, Government school