முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுவிற்பனைக்கு தடைகோரி எப்படி வழக்கு தொடர முடியும்? மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுவிற்பனைக்கு தடைகோரி எப்படி வழக்கு தொடர முடியும்? மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் - சென்னை உயர்நீதிமன்றம்

டாஸ்மாக் - சென்னை உயர்நீதிமன்றம்

பார்கள் நடத்த சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரை மதுபானம் விற்க தடை விதிக்கக் கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் மது அருந்தி இரண்டு பேர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் தரத்தை சோதித்து உறுதிபடுத்தும் வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க தடை விதிக்க கோரி கோவையை சேர்ந்த பூமிராஜ் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களில் மதுபானங்களை விற்க சட்ட ரீதியாக அனுமதியளிக்கப்படாத நிலையில், அனைத்து டாஸ்மாக் பார்களிலும் காவல்துறையினர் உதவியுடன் 24 மணி நேரமும் தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றம்சட்டப்பட்டது.

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான வகை அருந்த உகந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பார்களில் மதுபானம் விற்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுவிலக்கு சட்டத்தில் பார்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மது விற்பனைக்கு தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும், மதுவிலக்கு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளிடம் தான் முறையிட முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், டாஸ்மாக் வணிகத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து அரசுக்கு தெரியும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

top videos
    First published:

    Tags: Chennai High court, Tasmac