சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்திலும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது.
பேனா சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக மற்றும் மீனவர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால், மெரினா கடலில் பேனா சிலை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கடற்கரை அருகே மரங்களை நட வேண்டும் என்றும் தமது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலில் பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவ சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட மனு விசாரணைக்காக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.