முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கருணாநிதி பேனா சின்னத்துக்கு எதிராக சட்டப் போராட்டம் - சீமான் அறிவிப்பு

கருணாநிதி பேனா சின்னத்துக்கு எதிராக சட்டப் போராட்டம் - சீமான் அறிவிப்பு

சீமான்

சீமான்

மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாமல், இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சீமான் சாடியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இதுதொடர்பான சீமான் ட்விட்டர் பதிவில், ‘கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல் என்று சாடியுள்ளார்.

சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது. அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க : மதுவிற்கு தானியங்கி இயந்திரமா? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாமல், இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சீமான் சாடியுள்ளார்.

மத்திய அரசின் இந்த அனுமதி தவறான முன் உதாரணம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அமைப்பு சாடியுள்ளது.

First published:

Tags: DMK leader Karunanidhi, Karunanidhi statue, Naam Tamilar katchi, Seeman