முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பங்குனி உத்திர திருவிழாவுக்கு பழனி செல்வோர் கவனத்துக்கு..! தஞ்சாவூர் - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்..

பங்குனி உத்திர திருவிழாவுக்கு பழனி செல்வோர் கவனத்துக்கு..! தஞ்சாவூர் - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்..

சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

தஞ்சாவூர்- பழனி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தஞ்சாவூர் - பழனி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்.

முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரம் பார்வதி திருக்கல்யாணம், வள்ளிப்பிராட்டியின் அவதார தினம், சுவாமி ஐயப்பனின் அவதார தினம் எனப் பல்வேறு சிறப்புகளை உடையது பங்குனி உத்திர தினம்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி 05.04.2023 மற்றும் 06.04.2022 ஆகிய இரண்டு தேதிகளில் தஞ்சாவூர்- பழனி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி தஞ்சாவூரிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் ரயிலானது பூடலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் வழியாக மதியம் 1.30 மணிக்கு பழனி சென்றடையும்.

மறுமார்க்கம் பழனி-தஞ்சாவூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் பழனியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 06.15 மணிக்கு தஞ்சாவூர் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Palani Murugan Temple, Special trains, Tamil News, Tanjore