முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக என்ற பெயரை உச்சரிக்காமல் அமர்ந்த ஓபிஎஸ்.!

அதிமுக என்ற பெயரை உச்சரிக்காமல் அமர்ந்த ஓபிஎஸ்.!

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

பெரியார் நடத்திய வைக்கம் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா அறிவிப்புக்கு அதிமுக என குறிப்பிடாமல் ஓபிஎஸ் வரவேற்றுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த நிலையில் ஒவ்வொரு கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் அவரவர் கட்சி சார்பிலே இந்த அறிவிப்பை வரவேற்று பேசி அமர்ந்தனர். இறுதியில் ஓபிஎஸ் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.அப்போது எழுந்து பேசிய ஓ.பி.எஸ், முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொழி கடந்து மாநிலம் கடந்து பெரியார் நடத்திய சமூக நீதிப் போராட்டத்திற்கான வைக்கப் போராட்டம் குறித்து முதலமைச்சர் எடுத்து கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பெரியார், அண்ணா ,எம்ஜிஆர் வழியில் சமூக நீதி காத்த பெண்மணியாக 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு வரலாற்றில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெரும். தேசிய விழாவாக நமது முதலமைச்சர் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

top videos

    இந்த அறிவிப்பை வரவேற்கிறேன் என பேசி அமர்ந்தார்.110 விதியின் கீழ் வைக்கம் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை வரவேற்று பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்,பேசிய எந்த இடத்திலும் அதிமுக பெயரை குறிப்பிடாமலே பேசி அமர்ந்தார். கடந்த 20ம் தேதி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆதரித்து பேசிய ஓபிஎஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதாக கூறினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: OPS, Tamil Nadu, TN Assembly, TN Budget 2023