முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அண்ணாமலை முன்னிலையில் அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் இணைகிறாரா?

அண்ணாமலை முன்னிலையில் அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் இணைகிறாரா?

மைத்ரேயன்

மைத்ரேயன்

Maithreyan to Join BJP? | அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார். அதன் பிறகு மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு சென்றார். இதனால், அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்.பி. மைத்ரேயனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த மைத்ரேயன், மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: BJP, OPS