அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ‘திடீர் சாம்பார், திடீர் ரசம் போல், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதாகக் கூறியுள்ளார். தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்றும் விமர்சித்துள்ளார். கட்சி விதிகளுக்கு உட்படாமல் இது போன்று அறிவித்து தேர்தல் நடத்துவது ஒரு மாபெரும் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும் செயலாகும், ஆகவே இதனை நாங்கள் மிகவும் கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ’5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறும். அதற்கு முறையாக அடிப்படை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கப்பட்டு, உறுப்பினர்கள் சரிபார்க்கப்பட்ட வேண்டும். பின்னர் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அதற்குப் பின்னர் தான் உட்சபட்ச பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இவை எதையையும் கடைப்பிடிக்காமல் பிக் பாக்கெட் அடிப்பது போல் பதவியைப் பெற முயற்சி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஈரோடு இடைத்தேர்தலில் மாபெரும் இயக்கமான அதிமுக தோற்றத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்றும், கட்சியை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, Edappadi Palanisami, EPS, O Panneerselvam, OPS