முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓபிஎஸ் மாநாட்டு மேடையில் கத்தியுடன் ஏறிய நபர்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

ஓபிஎஸ் மாநாட்டு மேடையில் கத்தியுடன் ஏறிய நபர்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் ஏறிய நபர் கைது

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் ஏறிய நபர் கைது

OPS Meeting In Trichy | கருத்தப்பாண்டியை பொன்மலை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட மாநாட்டில் கத்தியுடன் ஒருவர் மேடை ஏறியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில், அதிமுக பொன்விழா, கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதிமுக தொண்டர்களை ஒன்று இணைக்கும் தர்மயுத்தம் நடைபெற்று வருகிறது. இன்று முதல் நமது தர்மயுத்தம் தொடக்கம். அதிமுகவை அழிக்க எடப்பாடி. பழனிச்சாமியின் நம்பிக்கை துரோகத்திற்கு சாவு மணி அடிக்க நீங்கள் அனைவரும் ஒன்று இணைய வேண்டும். தொண்டர்களுக்காக நான் எவ்வளவு பெரிய தியாகம் கூட செய்ய தயார். அடுத்து அமைய போது ஜெயலலிதா ஆட்சியாக தான் இருக்க வேண்டும். இந்த மாநாடு புரட்சி , வெற்றி மாநாடு ஆகும் என ஓபிஎஸ் பேசினார்.

கட்சியின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய போதும், மாநாட்டில் அதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செங்கோல் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இனி இதையெல்லாம் செய்தால் கைது: அமலுக்கு வந்தது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

இந்த நிலையில் கத்தியுடன் ஒருவர் மேடையேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பிடித்துச் சென்ற போலீசார், பொன்மலை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில், விருதுநகர் மாவட்டம், சீனிவாசகப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்பதும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஓபிஎஸ் அணி விவசாயி பிரிவு தலைவர் என்பதும் தெரியவந்தது.

top videos

    மேலும், தமது பாதுகாப்புக்காக கத்தி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சில கொலை வழக்குகள் உள்ளதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் மாநாட்டு மேடை சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    First published:

    Tags: ADMK, OPS, Trichy