முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான வழக்கு: ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் என்னென்ன?

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான வழக்கு: ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் என்னென்ன?

இபிஎஸ் - ஓ.பி.எஸ்

இபிஎஸ் - ஓ.பி.எஸ்

OPS Arugument in Chennai High Court | அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக இன்று மாலையே அறிவிக்க வாய்ப்புள்ளதால், தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மணிசங்கர், ஸ்ரீராம் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். அதில், பொதுச்செயலாளார் தேர்தல் உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது எனவும் ஓபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர்.

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே கடிதங்கள் அனுப்பப்படுகிறது எனவும் ஓபிஎஸ் தரப்பினர் சுட்டிக்காட்டினர். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம் எனவும் குறிப்பிட்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் அடிப்படை உறுப்பினர் போட்டியிட முடியாது என்பதும், கட்சியில் 10 ஆண்டுகளும், தலைமை கழக நிர்வாகிகளாக 5 ஆண்டுகளும் இருப்பவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதும் புதுமையான விதி எனவும் கூறினர். வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை முடியும் என அறிவித்துள்ளதன் மூலம் 20 மாவட்ட செயலாளர்களை எப்படி சந்தித்து முன்மொழியவும், வழிமொழியவும் கோர முடியும் எனவும் ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது... தீர்ப்பு தேதியை அறிவித்த உயர்நீதிமன்றம்..!

ஒருவர்தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் எனக்கூறி இன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்வானதாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால், ஏற்கனவே உள்ள வழக்கு செல்லாததாகிவிடும் என்பதால், நீதிமன்றம் தலையிட்டு தேர்தலுக்கு தடை விதிப்பது அவசியம் எனவும் ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது.

மேலும், வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

First published:

Tags: Chennai High court, OPS - EPS