முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு... உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு... உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!

ஈபிஎஸ் - ஓபிஎஸ்

ஈபிஎஸ் - ஓபிஎஸ்

இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு ஆகியவை செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தீர்ப்பு அளித்தார். இதனை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு மனு மட்டும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட நகல் வராததால், அந்த நகல் இல்லாமலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மற்ற மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது.

இதையும் படிக்க : கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி பணியிடை நீக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

இதனை ஏற்ற நீதிபதிகள், நாளை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: ADMK, Chennai High court, Edappadi Palaniswami, General Secretary, O Pannerselvam