முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ”ஒரு காஃபி சாப்பிட சொன்னார்...“ - சபரீசனுடனான சந்திப்பு பற்றி ஓபிஎஸ் விளக்கம்..!

”ஒரு காஃபி சாப்பிட சொன்னார்...“ - சபரீசனுடனான சந்திப்பு பற்றி ஓபிஎஸ் விளக்கம்..!

ஓபிஎஸ் - சபரீசன்

ஓபிஎஸ் - சபரீசன்

ஓ.பன்னீர்செல்வத்திடம், சபரீசனை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

  • Last Updated :
  • Chennai, India

கிரிக்கெட் போட்டியின் போது, தமிழக முதலமைச்சரின் மருமகன் சபரீசனை சந்தித்தது, அரசியல் ரீதியானது அல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை நேரில் சந்தித்தார். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், லட்சியத்தை அடைய இரு இயக்கங்களும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். ஒரே லட்சியம் அதிமுகவை மீட்டெடுப்பதுதான். சிபிஐ, சிபிஎம் போல இணைந்து செயல்படுவோம்.

அம்மாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும். கட்சியை ஹைஜேக் செய்தவர்களிடமிருந்து கட்சியை மீட்க வேண்டும். அ.திமுக மீட்டெடுக்க வேண்டும் என்று நானும், சகோதாரர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து செயல்படவுள்ளோம் என்றார்.

இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் , தோனி இருவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் - உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திடம், சபரீசனை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  கிரிக்கெட் போட்டியின்போது, சபரீசனை சந்தித்தது மரியாதை நிமித்தமானது எனக் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் மனித பண்புடன் நடந்து கொள்வது தமது பழக்கம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

top videos

    சபரீசன் அவரது உதவியாளர் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தார், ஒரு காபி சாப்பிடச் சொன்னார். நான் போய் உட்காந்து காபி சாப்பிட்டு வந்தேன். அந்த விஐபிக்கள் எல்லாம் நாங்கள் என்ன பேசி கொண்டிருந்தோம் என எங்களையே பார்த்துகொண்டிருந்தனர். போதுமா இந்த விளக்கம். விளக்கம் சொல்லியே நான் ஓய்ந்துபோக வேண்டும் என ஓபிஎஸ் நகைச்சுவையாக பேசினார்

    First published:

    Tags: OPS, TTV Dhinakaran