முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவில் திருவிழாக்களில் துயர சம்பவங்கள் தொடர்கின்றன - சித்திரைத் திருவிழாவில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து இபிஎஸ் விமர்சனம்

கோவில் திருவிழாக்களில் துயர சம்பவங்கள் தொடர்கின்றன - சித்திரைத் திருவிழாவில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து இபிஎஸ் விமர்சனம்

ஈபிஎஸ்

ஈபிஎஸ்

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் தான், அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரின் இரண்டாண்டு சாதனை என விமர்சித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோயில் திருவிழாக்களில் ஏற்படும் துயர சம்பவங்கள் தான் திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ’கடந்தாண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் 2 பேர் மரணமடைந்த நிலையில், வரும் ஆண்டுகளில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எந்த ஒரு அசாம்பாவிதமும் நடைபெறாது என அமைச்சர் பெருமை பேசியதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், கடந்த ஐந்தாம் தேதி நடந்த கள்ளழகர் விழாவில் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கியும், ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாகவும், ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சமாக மதுரை சித்திரை திருவிழாவில் பட்டா கத்தியுடன் இளைஞர்கள் நடனமாடியதும், சுதந்திரமாக உலாவியதையும் பார்க்கும் போது தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா என சந்தேகம் எழுவதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க:  நமது சமூக வரலாறும் அடங்கியிருக்கிறது' - ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்துக்கு முதல்வர் வாழ்த்து

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் தான், அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரின் இரண்டாண்டு சாதனை என விமர்சித்துள்ளார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, தஞ்சை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட துயர சம்பவங்கள் என திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெறும் துயர சம்பவங்கள் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: CM MK Stalin, EPS