முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம்!

புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

O.Paneerselvam | அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் புதிய நிர்வாகிகள் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.

பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நிலம் வாங்கப் போறீங்களா...? பட்ஜெட்டில் நல்ல செய்தி சொன்ன நிதியமைச்சர்..!

இந்த நிலையில் பழங்குடியின நலப்பிரிவு உள்ளிட்ட பொறுப்புகளுக்கு செயலாளர்களை நியமனம் செய்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

top videos
    First published:

    Tags: ADMK, OPS