முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குஜராத்தில் நடைபெறும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்- மதுரையிலிருந்து மேலும் ஒரு சிறப்பு ரயில்

குஜராத்தில் நடைபெறும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்- மதுரையிலிருந்து மேலும் ஒரு சிறப்பு ரயில்

தமிழ் சங்கமம் தொடக்க விழா

தமிழ் சங்கமம் தொடக்க விழா

சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்காக மதுரையிலிருந்து கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். பெரும்பாலும், விற்பனைத் தொழிலை அவர்கள் முக்கிய தொழிலாக அம்மக்கள் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான கலாச்சார முக்கியத்துவத்தையும், பிணைப்பையும், ஒற்றுமையையும் பறை சாற்றும் விதமாக குஜராத்தில் 'சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்' இரண்டு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சங்கம நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

இதில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே பல நூற்றாண்டுகளாக பழமையான கலாச்சார தொடர்புகளை வெளிப்படுத்துகிறது என்று ட்வீட் செய்துள்ளார். சிவபெருமானின் புனித பூமியில் பல நூற்றாண்டுகள் பழமையான சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய தொடர்பை மக்கள் காண்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சங்கம நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 3,000 பேர் சிறப்பு ரயில் மூலம் குஜராத் செல்கின்றனர். இந்த இரண்டு வார கால நிகழ்வு ஏப்ரல் 17 முதல் 30 வரை குஜராத் மாநிலம் சோம்நாத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் விராவல் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி கொடியை தொடங்கிவைத்தார்.

மதுரையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைகிறது. ஏப்ரல் 14ம் தேதி மாலை 5.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், ஏப்ரல் 17ம் தேதி காலை 7.30 மணிக்கு விராவல் ரயில் நிலையம் சென்றடைகிறது. இன்று முதல் 23ம் தேதி வரை மதுரையில் இருந்து புறப்படும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் மட்டும் வைரவல் ரயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கு சென்றடையும்.

திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை, ரேணிகுண்டா, கச்சிகுடா, நான்டெட், பூமா, அகோலா, ஜலகாவோன், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையே வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

top videos

    ஏற்கெனவே குஜராத்தின் விராவல் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் சூழலில் தற்போது மேலும் ஒரு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் துவாரகா - மதுரை இடையே இன்று முதல் 29ஆம் தேதி வரை 11 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாள்தோறும் இரவு 10.30 மணிக்கு துவாரகா ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் ராஜ்கோட், சூரத், சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம் வழியாக மதுரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Saurashtra Tamil Sangamam