முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தாறுமாறாக எகிறிய ஆம்னி பேருந்துகள் கட்டணம்... அதிர்ச்சியில் மக்கள்

தாறுமாறாக எகிறிய ஆம்னி பேருந்துகள் கட்டணம்... அதிர்ச்சியில் மக்கள்

ஆம்னி பேருந்து

ஆம்னி பேருந்து

Omni bus fare | அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியதால், வார இறுதி நாட்களில் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் சென்னை இடையேயான ஆம்னி பஸ் கட்டணம் வழக்கமாக 750 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை இருக்கும் என்ற நிலையில் வார இறுதி நாட்களில் 1,000 ரூபாய் முதல் 1,900 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கோவை மற்றும் மதுரை இடையேயான பேருந்து கட்டணமும் இருமடங்கு அதிகரித்து 1,200 ரூபாயாக உள்ளது. கோவை மற்றும் நெல்லை இடையே வழக்கமாக 700 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.

அது தற்போது, 1,530 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளில் 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

மதுரை - சென்னை இடையேயான தனியார் பேருந்துகளின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்து ரூ.1,300 முதல் ரூ.4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், ரயில்களில் பயணிப்பதை விட ஆம்னி பேருந்துகளில் வசதி அதிகமாக இருப்பதாகவும் சில பயணிகள் கூறுகின்றனர்.

சாதனைப் பெண்மணிக்கு வாழ்த்துகள்... எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்பெண்ணுக்கு முதலமைச்சர் வாழ்த்து

top videos

    இதனிடையே, தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    First published:

    Tags: Bus, Omni Bus, School Reopen