முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை- மும்பை போட்டிக்கு இடையே ஓ.பி.எஸ் சபரீசன் சந்திப்பு- காரணம் என்ன?

சென்னை- மும்பை போட்டிக்கு இடையே ஓ.பி.எஸ் சபரீசன் சந்திப்பு- காரணம் என்ன?

ஓபிஎஸ் - சபரீசன்

ஓபிஎஸ் - சபரீசன்

சென்னையில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சபரீசனை சந்தித்தது அரசியல் களத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த போட்டியை காண, லோக்கேஷ் கனகராஜ், அனிருத், நயன்தாரா, நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்திருந்தனர். இந்த போட்டியை காண முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வந்திருந்தார். அப்போது அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை போட்டியின் இடையில் சந்தித்து பேசியுள்ளார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிக்க : இந்தியாவில் அண்மைக் காலமாக மதமே ஆட்சி செய்கிறது - சீமான் காட்டம்

அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் தான் அதிமுக உள்ளது என கூறி வருகிறார். மேலும் சமீபத்தில் ஓபிஎஸ் தலைமையில், திருச்சியில் முப்பெரும் விழா மாநாடும் நடத்தப்பட்டது.

top videos

    இந்நிலையில் தான் ஓபிஎஸ் - சபரீசனின் சந்திப்பு நடந்துள்ளது. அதிமுகவின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஓபிஎஸ் திமுகவிடம் ஆதரவு கேட்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள்.

    First published:

    Tags: ADMK, CSK, O Pannerselvam, OPS