முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் ‘பி’ டீமாக செயல்படுகிறார்... டெல்லியில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் ‘பி’ டீமாக செயல்படுகிறார்... டெல்லியில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

எடப்பாடி பழனிசாமி பேட்டி

எடப்பாடி பழனிசாமி பேட்டி

பிடிஆர் ஆடியோவை பொருட்படுத்தாமல் இருக்க முடியாது எனவும் அந்த ஆடியோவின் உண்மைதன்மை குறித்து விசாரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

  • Last Updated :
  • Delhi, India

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று (புதன்கிழமை) டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பில் அதிமுக - பாஜக கூட்டணியை வலுபடுத்துவது குறித்தும், திமுக மீது உள்ள புகார் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தனக்கும் எந்த தகராறும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் பிடிஆர் ஆடியோவை பொருட்படுத்தாமல் இருக்க முடியாது எனவும் அந்த ஆடியோவின் உண்மைதன்மை குறித்து விசாரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் இருந்த போது டெண்டரில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்த அவர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை அதிமுக ஆட்சியில் இருந்த போது அதை முறையாக விசாரித்தது எனவும், குற்றவாளிகளை ஜாமினில் எடுத்தது திமுக தான் என குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க : அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!

மேலும் ஒருசிலரை தவிர அதிமுகவில் யாரைவேண்டுமானாலும் சேர்க்க தயாராக உள்ளோம் எனவும், ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் ‘பி’ டீமாக செயல்படுகிறார் என தெரிவித்தார். பொதுக்குழு அவரை அங்கீகரித்து விட்டால் அது சிறந்த பொதுக்குழு என கூறுவார் எனவும், அதே பொதுக்குழு என்னை அங்கிகரித்துவிட்டால் அது சரியில்லை என கூறுவார் எனவும் சாடினார்.

மு.க.ஸ்டாலின் எப்போதும் அதிமுகவை எப்படி முடக்குவது, கட்சியை எப்படி உடைப்பது என சிந்தித்துக்கொண்டிருக்கிறார் என விமர்சித்த அவர், நான்கு ஆண்டு காலம் அதிமுக சிறப்பான ஆட்சியை கொடுத்ததாகவும், இரண்டே ஆண்டுகளில் இந்த ஆட்சி எப்போது முடிவிற்கு வரும் என மக்கள் கேட்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Pannerselvam, OPS - EPS