முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஏப்ரல் 2வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு... ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஏப்ரல் 2வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு... ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஏப்ரல் 2வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு... ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எடப்பாடி பழனிசாமி அறிவித்து, அதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்குக் கட்சியின் சட்டவிதிகளுக்கு உட்படுத்தப்படாமல் தேர்தல் நடத்தப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். தொடர்ந்து, அதிமுகவை மீட்க சட்டரீதியான முயற்சிகளை எடுப்போம் என்றும், தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

Also Read : அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் தகவல் தவறு- ஓ.பி.எஸ் தரப்பு விளக்கம்

மேலும், திருச்சியில் ஏப்ரல் 2வது வாரத்தில் மாபெரும் மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மாநாடு அதிமுக வரலாற்றில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மாநாட்டைத் தொடர்ந்து, மாவட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மாநாடு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: AIADMK, OPS