முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

இபிஎஸ் - ஓ.பி.எஸ்

இபிஎஸ் - ஓ.பி.எஸ்

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ‘கடந்த 2022 ஜூன் 23-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் நியமனத்தை பதிவு செய்து, பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே தீர்மானங்கள் முன்வைக்கப்பட இருந்ததாக தெரிவித்தார்.

அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும் என்றும், இதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துவிட்டதாகவும் வாதிட்டார். ஆனால் பொதுக்குழு மூலம் தற்போது பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சி விதிகளுக்கு எதிரானது என்றும் முறையிட்டார்.

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல... 12 மணி நேர வேலை மசோதாவுக்கு தி.க தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு

உள்கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து விசாரணையை வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2:15 மணிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

First published:

Tags: ADMK, O Panneerselvam