முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குரூப்-4 தேர்வில் முறைகேடா? விரிவான விசாரணை வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வில் முறைகேடா? விரிவான விசாரணை வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

குரூப் -4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்று விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘அரசு நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டுமானால் அதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவது, பேரிடர் காலத்தில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை மேற்கொள்வது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, உணவுப் பொருட்களை வழங்குவது, தேர்தல்களை நடத்துவது என அனைத்து அரசுப் பணிகளும் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய அரசு ஊழியர்களை நேர்மையாகவும், நியாயமாகவும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பணியை இந்திய அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. இந்தத் தேர்தல் வாக்குறுதியை ஐந்தாண்டுக்குள் நிரப்ப வேண்டுமென்றாலும், ஆண்டிற்கு 70,000 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவிலை. மனித வள மேலாண்மைத்துறை என்றுபெயர் மாற்றம் செய்தால் மட்டும் போதாது. மனித வளத்தை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான, காலிப் பணியிடங்களை ஆண்டுக்காண்டு நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதைச் செய்ததாக தெரியவில்லை. மாறாக பணி நீக்க நடவடிக்கைகளை திமுக அரசு செய்துவருகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெரிய அளவில் என்று பார்த்தால் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான 5,500 பணியிடங்களுக்கும், குரூப் 4 பதவிகளுக்கான 10,000 பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்படும் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் பல குளறுபடிகள் ஏற்பட்டு மறுதேர்வு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை அனைத்து கட்சி அரசியல் தலைவர்களாலும் வலியுறுத்தப்பட்டது.

அண்மையில் குரூப்-4 தேர்வுகளுக்கான முடிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டன. அந்தத் தேர்வு முடிவுகளில் ஒரே நிறுவனத்தில் பயின்ற 2,000 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமான ஆட்டம்... அசாம் கானை உருவக் கேலி செய்த ரசிகர்- வைரலாகும் வீடியோ

top videos

    முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறதா என்பது குறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ப மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Group 4, O Panneerselvam