முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அ.தி.மு.க கொடி பயன்பாடு... இபிஎஸ் விமர்சனத்துக்கு ஓ.பி.எஸ் பதிலடி

அ.தி.மு.க கொடி பயன்பாடு... இபிஎஸ் விமர்சனத்துக்கு ஓ.பி.எஸ் பதிலடி

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது குறித்து ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிடப்பட்டது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்து வந்தது.

இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்தியத் தேர்தல் ஆணையம் கர்நாடகா மாநில தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகள், நிர்வாகிகள் மாற்றம் ஏற்க்கப்பட்டது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், ‘அ.தி.மு.க பெயர், சின்னத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சின்னத்தைப் பயன்படுத்துவோர் சசிகலா உட்பட யாராக இருந்தாலும் வழக்கு தொடரப்படும்’ என்று தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘நாகரிகத்தை கடைபிடித்து, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் தேனி செல்வதற்காக மதுரை விமானநிலையத்துக்கு வருகை தந்தார். அப்போது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தங்களது கார்களில் அ.தி.மு.க கொடியுடனும், அ.தி.மு.க கரை வேட்டியுடன் வந்து அவரை வரவேற்பதற்காக வந்தனர். அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், ‘அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை’ என்று பதிலளித்தார்.

First published:

Tags: ADMK, O Panneerselvam