முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட தடைவிதிக்க வேண்டும்... ஓபிஎஸ் மேல்முறையீடு..!

பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட தடைவிதிக்க வேண்டும்... ஓபிஎஸ் மேல்முறையீடு..!

ஓபிஎஸ் தரப்பு

ஓபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக  பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட தடையில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதனால் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் முதல் அறிக்கை..!

மேலும் தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்கு பின் முரணாக இருப்பதாகவும், அவரது உத்தரவு அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ் பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் இளம்பாரதியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் புதன்கிழமை அன்று மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

top videos
    First published:

    Tags: ADMK, Chennai High court, Edappadi Palaniswami, O Pannerselvam