முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்தியாவில் அண்மைக் காலமாக மதமே ஆட்சி செய்கிறது - சீமான் காட்டம்

இந்தியாவில் அண்மைக் காலமாக மதமே ஆட்சி செய்கிறது - சீமான் காட்டம்

சீமான்

சீமான்

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாட்டில், மதத்தின் பெயரில் பிரிவினை தூண்டி விடப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு சர்ச்சைக்கு இடையே “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தமிழ்நாட்டில் நேற்று வெளியானது. சென்னையில் மட்டும் 15 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படம் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக கூறி அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி இத்திரைப்படத்தை எதிர்த்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை அமைந்தகரையில் உள்ள திரையரங்கம் அருகே சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

top videos

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாட்டில், மதத்தின் பெயரில் பிரிவினை தூண்டி விடப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவில் அண்மைக் காலமாக மதமே ஆட்சி செய்வதாகவும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கேரளா ஸ்டோரி படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    First published:

    Tags: Protest, Religion, Seeman