முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நொச்சிக்குப்பம் மீனவர்கள் பிரச்னை இன்று காலையுடன் முடிந்து விட்டது : சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

நொச்சிக்குப்பம் மீனவர்கள் பிரச்னை இன்று காலையுடன் முடிந்து விட்டது : சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Nochikuppam Fisherman Issue | நொச்சிக்குப்பம் மீனவர்கள் குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலுவான வாதங்களை முன் வைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

  • Last Updated :
  • Chennai, India

நொச்சிக்குப்பம் மீனவர்கள் பிரச்னை இன்று காலையுடன் முடிந்து விட்டதாகவும் மீனவர்கள் நலன் காக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரம் இல்லா நேரத்தில் நொச்சிக்குப்பம் சம்பவம் தொடர்பாக பேசிய ஓ.பன்னீர்செல்வம், "மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனையாக உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் கருணையோடு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழில் பாதுகாப்பு இடமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மீன் வியாபாரம் செய்யும் இடம், படகு நிறுத்தும் இடம் போன்றவை அடங்கிய படம் அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அப்போழுது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ’மீன்பிடி தொழிலை நம்பி வாழும் மக்கள் மீனவர்கள். அவர்களுக்கு அந்த தொழிலை விட்டால் வாழ்வாதாரம் இல்லை. போராடிவரும் நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் பிரதான சாலையில் பன்னெடுங்காலமாக மீன் பிடித்த வலைகளை உலர்த்தி படகுகளை நிறுத்தி அதனைஒட்டிய குடியிருப்புகளில் வசிக்கின்றனர். ஏதோ ஒரு நாள் போக்குவரத்து நெரிசல் என்ற அடிப்படையில் நீதிபதி அந்த பக்கம் வந்ததன் அடிப்படையில் நீதிபதிகள் தானாக முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்து தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருவது போல் உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள் என்றார்.

இதையும் படிங்க: பிச்சைக்காரரிடம் பணத்தை பிடிங்கி சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு வலைவீச்சு..

இதனையடுத்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ’மீனவர்கள் நலன்களுக்கு திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார். மேலும் நொச்சிக்குப்பம் மீனவ மக்களின் பிரச்சனை இன்று காலையோடு முடிவுக்கு வந்துள்ளது என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என பேசினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீனவ மக்கள்  கடலை நம்பியே தொழில் செய்து வருகிறார்கள். சென்னை வாசிகளுக்கும் பிரஸ்ஸான மீன் வேண்டும் என்றால் நொச்சிக்குப்பம் போகலாம் என்ற எண்ணமாக உள்ளது. அதனால் தான் அங்கு மக்கள் போக்குவரத்துக்கு இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்க கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

நேற்று மீனவர் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காணப்பட்டதால் தான் நேற்று வரை போக்குவரத்தை தடை செய்து வைத்திருந்தவர்கள், இன்று காலை முதல் நொச்சிக்குப்பம் சாலையில் போக்குவரத்தை அவர்களே முறைப்படுத்தி தற்போது சீராக நடந்து கொண்டிருக்கிறது. அதையும் கடந்து முதலமைச்சரின் மிக தீவிரமான நடவடிக்கையால் மூத்த வழக்கறிஞர்களை இந்த வழக்கில் வழக்காட செய்து மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். அவர்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று காலை நீதிமன்றத்தில் வழக்கு வந்திருக்கிறது வலுவான வாதங்களை முன் வைத்துள்ளது.

எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தங்கு தடையின்றி வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். போக்குவரத்திற்கு எந்த வித இடையூறும் இருக்காது எனவும் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

top videos

    பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையரும் உயர்நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவாதத்தையும் எழுதி தந்துள்ளார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இரு பக்கமும்  மீனவர்கள் மீன்கள் வியாபாரம் செய்யவதை உறுதிப்படுத்துவோம் என அஃப்ரவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த பிரச்சனை காலையோடு முடிவுக்கு வந்துவிட்டது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Chennai