முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எண்ணமில்லை - வைகோ திட்டவட்டம்

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எண்ணமில்லை - வைகோ திட்டவட்டம்

வைகோ

வைகோ

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற துரைசாமியின் கடிதத்தை மதிமுக நிராகரிக்கிறது - வைகோ

  • Last Updated :
  • Chennai, India

திமுகவை, தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி கடிதம் எழுதியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கடிதத்தில், “தங்களது அண்மைக் கால நடவடிக்கைகளால் மதிமுகவிற்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்திருந்தார்.

மேலும், “சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கட்சி உறுப்பினர்கள், தங்களைப் புதுப்பித்துக் கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் கட்சி நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டுள்ளது. மகனை ஆதரித்து, அரவணைப்பதும் தங்களின் சந்தர்பவாத அரசியலும் தமிழ்நாடு மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைந்து விடுவது சம கால அரசியலுக்கு சாலச் சிறந்தது ” என்றும் துரைசாமி சாடினார்.

அவரின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பரபரப்பை ஏற்படுத்தவே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரது குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை கிடையாது என்றும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ உடனே விளக்கமளித்தார்.

இதையும் படிங்க :  “ரஜினிகாந்த் ஒரு ஜீரோ..” - அமைச்சர் ரோஜா காட்டமான விமர்சனம்

இந்நிலையில் மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எண்ணமில்லை என வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 70 சதவீதம் மதிமுகவின் தேர்தல் நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளராக துரைசாமி அனுப்பிய கடிதத்தை நாங்கள் அலட்சியப்படுத்துகிறோம்

top videos

    இரண்டு வருடத்திற்கு கட்சிக்கு வராமல் தற்பொழுது அறிக்கையை அறிவித்திருக்கிறார் என்றால் அது எந்த நோக்கத்துடன் இருக்கும். கட்சியை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம் நிராகரிக்கிறோம்.எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக ஒற்றுமையாக நடத்தது.இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்” என வைகோ தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Durai Vaiko, MDMK, Tamil News, Vaiko