முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒடிசா ரயில் விபத்து: தமிழர்கள் நிலை என்ன? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன தகவல்!

ஒடிசா ரயில் விபத்து: தமிழர்கள் நிலை என்ன? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன தகவல்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - முதல்வர் ஸ்டாலின்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேற்றிரவு ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை கோரமண்டல் விரைவு ரயில்பாகங்க பஜார் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன்பின்னர், அவ்வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா விரைவு ரயிலும் அந்த ரயில்கள் மீது மோதியது.

இந்த கோர ரயில் விபத்தில் 280க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

இதையும்  வாசிக்க’’வரிசையாக மனித உடல்கள்..’’ ரயில் விபத்து குறித்து பதிவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மேலும், ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, MK Stalin