முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாங்கள் தான் உண்மையான அதிமுக: கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம்- ஓ.பி.எஸ் அணியினர் திட்டவட்டம்

நாங்கள் தான் உண்மையான அதிமுக: கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம்- ஓ.பி.எஸ் அணியினர் திட்டவட்டம்

கு.ப.கிருஷ்ணன்

கு.ப.கிருஷ்ணன்

எம்ஜிஆர் ஆல் தொடங்கப்பட்ட அதிமுக கட்சியின் கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்துவதற்கு எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்சி பொன்மலை, ஜி.கார்னர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக முப்பெரும் மாநாடு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு நடைபெற உள்ள ஜி கார்னர் மைதானத்தில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய கு.ப.கிருஷ்ணன், ‘அ.தி.மு.க கொடியையும், சின்னத்தையும் நாங்கள் பயன்படுத்த கூடாது என எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவரே அறிவித்து கொண்டுள்ளார். காவல் துறை எங்களுக்கு மாநாடு நடத்த நல்ல பாதுகாப்பு வழங்குவார்கள். நாங்களும் அவர்களுக்கு எந்த வித தொந்தரவும் செய்ய மாட்டோம்.

அதிமுக, எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சி. இரட்டை இலை சின்னமும் கொடியும் அவர் கொண்டு வந்தது. அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர பல வகைகளில் நாங்கள் உழைத்து உள்ளோம். எங்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் கிடையாது.

இதையும் படிக்க : டெல்லி செல்லும் இபிஎஸ்- அமித்ஷாவுடன் சந்திப்பு

மாநாடு நிச்சியமாக நடைபெறும். யார் என்ன புகார் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நீதிமன்றமோ, இந்திய தேர்தல் ஆணையமோ எந்த தடையும் விதிக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக கையில் பச்சை குத்தி இருக்கிறேன். யார் வந்து அழிப்பது, என் கை அறுத்து யார் எடுப்பார் என ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ‘இரட்டை இலை, சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம். வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். கொடியில் இரட்டை இலையை வைத்துள்ளது எங்களுடைய விருப்பம். நாங்கள் யாருக்கும் அஞ்சவில்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக என தெரிவித்தார்.

top videos

    செய்தியாளர் : சே.கோவிந்தராஜ். (திருச்சி)

    First published:

    Tags: ADMK, O Pannerselvam, Trichy