முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருதுகள் 2022 : INNOVATION விருது - இளம் தொழில்முனைவோர் செல்வ முரளி

மகுடம் விருதுகள் 2022 : INNOVATION விருது - இளம் தொழில்முனைவோர் செல்வ முரளி

செல்வமுரளி

செல்வமுரளி

Magudam awards 2022 : நியூஸ் 18 தமிழ்நாடு நடத்தும் மகுடம் விருதுகள் 2022 சென்னையில் நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் விதமாக நியூஸ்18 தமிழ்நாடு நடத்தும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகுடம் விருதுகள் -2022 இல் INNOVATION விருதினை செல்வ முரளி பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருபவர் செல்வ முரளி. இந்தியாவே திரும்பி பார்க்க வைத்த இளம் தொழில்முனைவோர். International Forum for Information Technology in Tamil என்ற நிறுவனத்தின் தலைவரான இவருக்கு கிராமங்களில் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனங்களை தொடங்குவதே லட்சியம்.

’அக்ரிசக்தி’ என்ற விவசாயம் சார்ந்த வார இதழ், ஆன்லைன் தளம் மற்றும் செயலியை உருவாக்கி விவசாயிகளின் நண்பனானார். தமிழ் அடிப்படையிலான இணையத்தள தேடல் இயந்திரத்தை உருவாக்கியது இவரது சாதனையின் முதல்படி ஆனது.

தமிழ் அடிப்படையிலான Android Tablet, CDrive என பெயரிடப்பட்ட 300 செயலிகள் உள்ள Pen Drive, ‘யுனி அம்மா’ என பெயரிடப்பட்ட 25 தமிழ் எழுத்துருக்கள் கொண்ட tamil Unicode, 100 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டுக்கான தமிழ் செயலி ஆகிய கண்டுபிடிப்புகள் இவரின் பெரும் சாதனைகள் ஆகும்.

இவர் உருவாக்கிய ‘விவசாயம்’ என்ற வேளாண் துறை சார்ந்த செயலி கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையையே வியப்பில் ஆழ்த்தியது. டெல்லிக்கு அழைக்கப்பட்ட இவர் சுந்தர் பிச்சையை சந்தித்து பாராட்டுக்களையும் பெற்றார்.

top videos

    விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு உழைக்கும் செல்வ முரளி அவர்களுக்கு மகுடம் விருதுகள் -2022 இல் INNOVATION விருதினை வழங்குவதில் நியூஸ்18 தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்கிறது.

    First published:

    Tags: Magudam Awards, News18 Tamil Nadu