முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் தகவல் தவறு- ஓ.பி.எஸ் தரப்பு விளக்கம்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் தகவல் தவறு- ஓ.பி.எஸ் தரப்பு விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடுவதாக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ததாக ஊடகங்களில் வரும் தகவல் பொய்யானது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் அறிவித்து, இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வமும் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களில் தகவல் பரவியுள்ளது. அது தவறான செய்தி என்று ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், ’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட சட்டதிட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணாக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அட்டவணை சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (19-03-2023) விசாரணைக்கு வருகிறது.

Also Read : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்... தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு..!

இந்த நிலையில், கழகத் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில், ஓ. பன்னீர்செல்வம் சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்யப்படுவதாக ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று குறிப்பிடப்பட்டதுள்ளது.

First published:

Tags: AIADMK, EPS, O Panneerselvam, OPS