பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் ஆளுநர், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு முன்னதாக பேசிய பிரக்ஞானந்தா, “மகுடம் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் சிறிய வயதில் இருந்தே பெரியவர்களுடன் தான் செஸ் விளையாடி வருகிறேன். அதனால் கார்ல்சன் உள்ளிட்டவர்களுடன் விளையாடும்போது பயந்ததில்லை. சென்னையில் செஸ் விளையாட்டிற்கு நல்ல கட்டமைப்பு உள்ளது. தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்தது மக்களிடையே செஸ் குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகப்படுத்தும்.
தற்போது 12ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளேன். ஆசிரியர்களும் சரி, பள்ளியிலும் சரி எனக்கு பக்கபலமாக இருந்தனர். செஸ் விளையாட்டில் முழு கவனமும் இருந்தாலும் சமயங்களில் படங்களும் பார்ப்பேன். அடுத்து பொன்னியின் செல்வம் படத்தை பார்க்க காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Magudam Awards