பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்துவரும் தமிழ் நாட்டைச் சார்ந்த கலைஞர்களை, சாதனையாளர்களை மகுடம் விருதுகள் மூலம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் சாதனை புரிந்தவர்களுக்கான மகுடம் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். வாழ்நாள் சாதனையாளர் விருது பாலம் கல்யாணசுந்தரத்துக்கும், இந்தியா சினிமாவின் பெருமை என்ற விருது கமல்ஹாசனுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது லோகேஷ் கனகராஜுக்கும் வழங்கப்பட்டது.
கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் பெருமை விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி கவுரவித்தார். இயக்குநர்கள் பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ், வசந்த், நடிகர் கார்த்தி, குஷ்பு ஆகியோர் உடன் இருந்தனர். மேடையில் பேசிய பாரதிராஜா, “தமிழ் திரை உலகில் நான் மிகவும் பெருமைப்படுவது கமல்ஹாசனை நினைத்துதான். இன்றளவும் நிஜமான உலக நாயகன் கமல்” என்று பாராட்டினார்.
கார்த்தி பேசும்போது, “பாடல்களே இல்லாமல் கைதி போன்ற ஒரு படத்தை எடுப்பதற்கான தைரியம் குருதிப்புனல் பார்த்துதான் வந்தது. கமல் தன்னை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் இந்தத் துறையே மொத்தமாக வளர்த்து முன்னோடியாக முன்னுதாரணமாக இருந்து வருகிறார்” என்றார்.
இறுதியாக பேசிய கமல்ஹாசன், “இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பாராட்டியது ஒரு விருது அல்ல, பல விருதுகள். நெகிழ்ந்து போனேன், பணிந்து போனேன், துணிந்து போனேன். மருத்துவமனையில் இருக்கும் போது நான் வந்து உன்னை பார்ப்பேன் என பாரதிராஜா தெரிவித்தார். இதோ இப்போது வந்திருக்கிறார். நான் வெளிச்சத்தில் இருக்கிறேன். இந்த மேடையில் இதற்கு முன்பு விருது வாங்கிய பலர் வெளிச்சத்துக்கு வர வேண்டும். அவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய நியூஸ்18க்கு நன்றி” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Magudam Awards