முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருதுகள் 2022 : தமிழகத்தின் சமூக, அரசியல் மாற்றத்திற்கு சினிமாவும் காரணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

மகுடம் விருதுகள் 2022 : தமிழகத்தின் சமூக, அரசியல் மாற்றத்திற்கு சினிமாவும் காரணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

Magudam awards 2022 | தமிழ்நாட்டில் சமூக மாற்றம் அரசியல் மாற்றத்துக்கு சினிமா காரணமாக இருந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்துவரும் தமிழ் நாட்டைச் சார்ந்த கலைஞர்களை, சாதனையாளர்களை மகுடம் விருதுகள் மூலம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் சாதனை புரிந்தவர்களுக்கான மகுடம் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். வாழ்நாள் சாதனையாளர் விருது பாலம் கல்யாணசுந்தரத்துக்கும், இந்தியா சினிமாவின் பெருமை  விருது கமல்ஹாசனுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது லோகேஷ் கனகராஜுக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய ஆளுநர், “கடவுளின் உருவமாக இருப்பவர் பாலம் கல்யாணசுந்தரம். இங்கு விருது பெற்றவர்கள் அனைவரும் சாதிப்பதற்கான ஊக்கமளிப்பவர்கள். உங்கள் உழைப்பால் சாதித்தவர்கள், உங்கள் கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டியவை. தமிழ்நாட்டில் சமூக மாற்றம் அரசியல் மாற்றத்துக்கு சினிமா காரணமாக இருந்துள்ளது.

top videos

    இளைஞர்கள் கடுமையாக உழைத்து முன்னேற கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். உங்கள் கதைகள் அவர்களுக்கு சென்றடைய வேண்டும். இந்த கதைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக நியூஸ்18 தமிழ்நாட்டுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Magudam Awards